பேச்சுவார்த்தையில் தாமதம்.. தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

3 வைகாசி 2025 சனி 17:44 | பார்வைகள் : 721
தொடருந்து தொழிலாளர்களுக்கும் SNCF நிறுவனத்துக்கும் இடையே இருக்கும் ஊதிய உயர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை இதுவரை இடம்பெறவில்லை. அதை அடுத்து குறித்த திகதிகளில் வேலை நிறுத்தம் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
மே 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. அன்றைய தினம் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாப்பு முகவர்கள், பயணச்சிட்டை பரிசோதிப்பவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அடுத்து வரும் சில நாட்களுக்குள் இரு தரப்புக்கும் இடையே இணக்கப் பேச்சுவார்த்தை இடம்பெறும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடருந்து நிறுவனம் இதுவரை தொழிற்சங்கத்தினரை
தொடருந்து தொழிலாளர்களை அதிகம் கொண்ட மூன்றாவது மிகப்பெரிய தொழிற்சங்கமான Sud-Rail ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.