பரிஸ் புறநகரங்களில் ஆலங்கட்டி மழை!!

3 வைகாசி 2025 சனி 20:25 | பார்வைகள் : 1297
இன்று மே 3, சனிக்கிழமை பரிசின் மேற்கு புறநகரங்களில் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்துள்ளது.
1 தொடக்கம் 3 செ.மீ வரையான இராட்சத அளவுகளில் பாரிய சத்தத்துடன் ஆலங்கட்டி மழை பெய்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக Yvelines மாவட்டத்தில் அதிகளவில் ஆலங்கட்டி கொட்டியது. மாலை 4 மணி முதல் 4.30 மணிவரை தொடர்ச்சியாக அரைமணிநேரம் மழை பெய்ததாகவும், மகிழுந்துகள், வீட்டின் கூரைகள், ஜன்னல்களை ஆலங்கட்டிகள் சேதமாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு 170 மின்னல் தாக்குதல்களும் பதிவாகியுள்ளன.
அத்தோடு அவசர இலக்கத்துக்கு 30 தொலைபேசி அழைப்புகள் பதிவாகியுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு தீயணைப்பு படையினர் உதவிக்குச் சென்றிருந்தனர்.