பிரெஞ்சு வரலாற்றில் முதன்முறையாக - வரவுசெலவுத் திட்டத்துக்காக பொதுமக்கள் வாக்கெடுப்பு!!

3 வைகாசி 2025 சனி 21:47 | பார்வைகள் : 853
வரவுசெலவுத் திட்டத்தின் பகுதி ஒன்றை நிறைவேற்ற, பொதுமக்களிடம் வாக்களிப்பு நடத்தவேண்டும் எனும் கோரிக்கையை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ முன்மொழிந்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்களைச் சேமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பொது நிதியில் இருந்து வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை நிறுத்தவும், மட்டுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மக்கள் நலத்திட்டத்தினை நிறுத்துவதற்கு ஏற்ற அனுமதியை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புச் செய்வதோடு, பொதுமக்களிடமும் விடுவதாகவும், இதற்காக மக்களிடம் வாக்களிக்கும் முறை ஒன்றைக் கொண்டுவரவேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இவ்வாறான ஒரு வாக்கெடுப்பு திட்டம் ஐந்தாம் குடியரசின் அரசாங்கத்தில் எப்போதுமே இடம்பெற்றதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இது தொடர்பிலான இறுதி முடிவுகளை ஜனாதிபதி மக்ரோனே எடுக்கவேண்டும் எனவும் பெய்ரூ குறிப்பிட்டார்.