பரிஸ் : பணத்துக்கான நபர் ஒருவர் கடத்தல்... - நால்வர் கைது!!

4 வைகாசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 4099
நபர் ஒருவரைக் கடத்தி அவரிடம் €1 மில்லியன் யூரோக்கள் பணம் கேட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐம்பது வயதுடைய ஒருவர், பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் வைத்து மே 1, வியாழக்கிழமை காலை கடத்தப்பட்டார். முகமூடி அணிந்த நால்வர் வாகனம் ஒன்றின் உதவியுடன் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது மகனைத் தொடர்புகொண்டு "அப்பாவை விடுவிக்க €1 மில்லியன் யூரோக்கள் பணம்" தருமாறு மிரட்டியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினரை தொடர்புகொண்டு விடயத்தை தெரிவிக்க, அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்தனர். பின்னர் நேற்று மே 3, சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் Palaiseau (Essonne) நகரில் வைத்து குறித்த நபர் மீட்கப்பட்டார். கடத்தல்காரர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
கடத்தப்பட்டவரின் மகன் கிரிப்டோகரன்ஸி நிறுவனம் ஒன்றை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025