Paristamil Navigation Paristamil advert login

d'Orsay - ஓவியங்களின் சங்கமம்!!

d'Orsay - ஓவியங்களின் சங்கமம்!!

22 ஆடி 2016 வெள்ளி 12:30 | பார்வைகள் : 18456


பரிஸ் என்றாலே வெளிநாட்டவருக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது... சந்தேகமே இல்லாமல் ஈஃபிள் கோபுரம் தான். அதன் பின்னர் லூவர் அருங்காட்சியகம். இருக்கட்டும். d'Orsay அருங்காட்சியகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எண்ணற்ற ஓவியங்கள், சிலைகள், சிற்பங்கள், தளபாடங்கள், புகைப்படங்கள் என கலை ரசனை நிரம்பிய மியூஸியம் இது. குறிப்பாக, லூவருக்கு மோனோலிசா மாதிரி, இங்கும் பல 'சாகாவரம்' பெற்ற ஓவியங்கள் காட்சிக்கு இருக்கின்றன.  சரி... ஓவியங்களில் என்னன்னவெல்லாம்  இங்கே இருக்கிறது? 
 
ஓவியர் ArtistVincent van Gogh வரைந்த உலகப்புகழ்பெற்ற 'Starry Night Over the Rhone' எனும் மகத்தான ஓவியம் இங்கேதான் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இவ் ஓவியம் செப்டம்பர் மாதம் 1888ஆம் ஆண்டு வரையப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. 
 
தாடிக்காரர் Pierre-Auguste Renoir, 1878 ஆம் ஆண்டு வரைந்த 
Bal du moulin de la Galette ஓவியம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு விருந்தின் நடனமாடும் குழுவினர் என்ற இந்த ஓவியத்துக்கு பல கதைகள் பின்னணியில் உண்டு. 
 
ஓவியர் Édouard Manet வரைந்த Le Déjeuner sur l’herbe எனும் ஓவியமும் இங்கு தான் உள்ளது. நிர்வாண பெண்கள் சூழ, உரையாடிக்கொண்டிருக்கும் ஒரு ஆண்கள் என்ற அந்த ஓவியம் மிக புகழ்பெற்றது. ஓவியம் 1863ல் வரையப்பட்டது. 
 
Gustave Courbet வரைந்த The Painter's Studio  (ஓவியர்களின் கலைக்கூடம்) எனும் ஓவியமும் இங்குகான் உள்ளது. 1855 இல் வரையப்பட்டது. 
 
1894 இல் ஓவியர் Paul Cézanne தன் வாழ்நாளின் இறுதிநாட்களில் 
வரைந்த The Card Players எனும் சீட்டாட்டம் ஆடுபவர்களின் ஓவியமும் இங்கு காட்சிக்கு உள்ளன.
 
இவை உட்பட பல எண்ணற்ற ஓவியங்கள் அதன் 'ஹிஸ்ட்ரி'யுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வீட்டு சுட்டிகளின் விடுமுறையை அறிவுபூர்வமாக கழிக்க, Rue de Lille 75343 Paris, France எனும் முகவரியில் அமைந்துள்ள d'Orsay அருங்காட்சியகத்துக்கு தவறாமல் விஸிட் அடியுங்கள்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்