Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் எடுக்கப்பட்ட - முதல் வண்ணப்படம்!

பிரான்சில் எடுக்கப்பட்ட -  முதல் வண்ணப்படம்!

21 ஆடி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 19429


பிரெஞ்சுக்காரர் பல விஷயங்களில் முன்னோடியாக இருப்பது நாம் அறிந்ததே. முதன் முறையாக 'வீடியோ'வை உலகுக்கு அறிமுகப்படுத்தியது பிரான்ஸ். உலகின் முதல் வண்ணத்திரைப்படத்தை எடுத்ததும் பிரான்ஸ் தான். அத்திரைப்படம் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்!!
 
'Vie et Passion du Christ'
 
அதுவரை காலமும் கருப்பு வெள்ளையிலும், 12 Frame திரைப்படங்கள், ஊமைப்படங்களாகவும் சினிமா வெளியாக, வண்ணத்திரைப்படம் முதன் முறையாக பிரான்சில் வெளியானது. திரைப்படத்தின் பெயர் Vie et Passion du Christ. படத்தின் பெயரே சொல்லிவிடும் இது எது தொடர்பான திரைப்படம் என்று. வெளியான ஆண்டு 1903! 
 
இதுவும் ஒரு ஊமைப்படம் தான். திரைப்படம் திரையிடப்படும் போது பின்னால் இருந்து குரல் கொடுத்தார்களாம். அதாவது பகுதி பகுதியாக பிரித்து கதையை சொல்லிவிட்டு காட்சிகளை ஓட விடுவார்களாம். 'ஏ ஆமாப்பா... அவங்க சொன்னது திரைல வருது!' என ரசிகர்கள் ஆரவாரப்பட்டனர்.  இப்படியாக 43 நிமிடங்கள் ஓடுகிறது இத்திரைப்படம். 
 
இத்திரைப்படத்தை இருவர் இயக்கியிருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் Lucien Nonguet, மற்றவர் Ferdinand Zecca. படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த இருவர் முகங்களுக்கும் 'க்ளோசப்' இல்லை. மேலும் படத்தில் உள்ள அனைத்து 'ஃப்ரேம்'களும் ஒரே இடத்தில் இருக்கும். ஆடாது அசையாது!! 
 
இப்படியாக எடுக்கப்பட்ட இத்திரைப்பஅம், அடுத்த வருடம் (1904) அமெரிக்காவில் வெளியானது. டப்பிங் தேவையில்லை தானே. பிரெஞ்சு ஸ்கிரிப்ட்டை ஆங்கிலத்துக்கு மாற்றி விட்டு பின்னணி குரல் கொடுத்தார்களாம்!! 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்