நாடு முழுவதும் - வீதிகளில் போக்குவரத்து நெரிசல்!!

4 வைகாசி 2025 ஞாயிறு 10:45 | பார்வைகள் : 429
இன்று மே 4, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் உள்வரும் அனைத்து வீதிகளில் பலத்த போக்குவரற்று நெரிசல் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உள்வரும்" (retours) வீதிகள் பலத்த நெருக்கடியைச் சந்திக்கும் என வீதி போக்குவரத்து அவதானிப்பாளர்களான Bison Futé அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது. A10, A11, A13, A61, A7, A8, A9 உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் பதிவாகும்.
நீண்ட விடுமுறை இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது. அதை அடுத்து விடுமுறைகளுக்காகச் சென்றவர்கள் தங்கள் நகரங்களுக்கு திரும்புகின்றனர்.