Paristamil Navigation Paristamil advert login

பெங்களூருக்கு எதிராக 2 ரன்னில் தோல்வியுற்றது குறித்து பேசிய தோனி

பெங்களூருக்கு எதிராக 2 ரன்னில் தோல்வியுற்றது குறித்து பேசிய தோனி

4 வைகாசி 2025 ஞாயிறு 11:55 | பார்வைகள் : 115


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதற்கு அணித்தலைவர் எம்.எஸ்.தோனி பழியை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

முதலில் ஆடிய பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் குவித்தது. விராட் கோஹ்லி 62 (33) ஓட்டங்களும், ஜேக்கப் பெத்தெல் 55 (33) ஓட்டங்களும் விளாசினர்.

சிக்ஸர் மழை பொழிந்த ரோமரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்தார்.  

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆயுஷ் மாத்ரே ருத்ர தாண்டவம் ஆடினார். 48 பந்துகளை எதிர்கொண்ட அவர், 5 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் விளாசினார். ஆனால் ஜடேஜா தவிர ஏனைய வீரர்கள் சொதப்பினர்.

வெற்றியை நெருங்கிய சமயத்தில் தோனி ஆட்டமிழக்க, சென்னை அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

கடைசிவரை களத்தில் நின்ற ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 45 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் குவித்தார்.

தோல்விக்கு பின் பேசிய அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, "நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கியபோது தேவையான பந்துவீச்சுகள் மற்றும் ஓட்டங்களுடன் அழுத்தத்தைக் குறைக்க, இன்னும் சில ஷாட்களை மாற்றியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

நான் பழியை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் அதிக யார்க்கர்களைப் பயிற்சி செய்ய வேண்டும். எங்கள் துடுப்பாட்ட வீரர்களில் பெரும்பாலோர் paddle ஷாட்டை விளையாடுவதில்லை" என தெரிவித்துள்ளார்.      

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்