Paristamil Navigation Paristamil advert login

வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கை என்ன? - முழுமையான விபரம்!!

வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கை என்ன? - முழுமையான விபரம்!!

4 வைகாசி 2025 ஞாயிறு 11:49 | பார்வைகள் : 475


SNCF பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பானது மக்களைப் பெரிதும் சிக்கலிற்கு உள்ளாக்க உள்ளது.

இருப்பினும் இவர்களின் பணிப்புக்கணிப்பு எச்சரிக்கைக்குக் காரணம் என்ன?

வேலைத்தர உயர்வு, ஊதிய உயர்வு என மேலோட்டமாகப் பார்த்தாலும் இதன் விளக்கம் என்ன?

தொடருந்துப் பணியாளர்களின் தொழிற்சங்கங்களான Sud-Rail , CGT-Cheminots  ஆகியவை தொடருந்து ஓட்டுநர்கள் மற்றும் மற்றைய பணியாளர்களின் வேலைத்தரம் மிகவும் மோசமாக உள்ளதெனவும். இவர்களது மாத ஆரம்பத்தில் வழங்கப்படும் வேலைநேர அடைவணை (Planning) இறுதிக் கணங்களில் மாற்றப்பட்டு உடனடியாக பணிக்கு வரும்படி அழைக்கப்படுகின்றனர். இது சட்டத்திற்குப் புறம்பானது. நேர மாற்றங்கள் 48 மணிநேரங்களிற்கு முன்னர் அறிவிக்கப்படல் வேண்டும். பணியாளர் வேறு அத்தியாவசிய அலுவல்களிற்கான நேரம் எடுத்திருந்தால் அவரை வற்புறுத்த முடியாது.

ஆனால் இதனை எதனையும் SNCF மதிக்காததால் பணியாளர்கள் மன உளைச்சலிற்கும் உள்ளாகின்றார்கள்.

அத்துடன் அவர்களிற்கான ஊதிய உயர்வும் கோரப்பட்டுள்ளது.

அதேநேரம் பயணச்சீட்டுப் பரிசோதகர்கள், கண்காணிப்பாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் தேசியத் தெரிpற்சங்கமான Collectif national ASCT (CNA),  Sud-Rail,  உடன் இணைந்து முறையான நேர அட்டவணை மற்றும் மாதாந்தம் 100 யூரோக்கள் ஊதிய உயர்வும் கோரி உள்ளனர்.

இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக SNCF மறுத்துள்ளது. ஊதிய உயர்வு வருடாந்தம் 1.5 இலிருந்து 2.2 சதவீதம் பேச்சுவார்த்தைகளின் பின்னர் நவம்பர் மாதத்தின் பின்னர் உயரத்தப்படும். அதுவும் பணவீக்கத்தைப் பொறுத்துத்தான் எனவும், நேர அட்டவனைக்கு புதிய செயலி மூலம் சரி செய்ய முயல்வோம் எனவும், SNCF குழுமத்தின் தலைவர் JEAN-PIERRE FARANDOU தெரிவித்துள்ளார்.

இதனால் முட்டுச் சந்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பேச்சுவார்த்தைகள் 5ம் திகதி முதல் 11ம் திகதி வரையான வேலை நிறுத்தத்தை உறுதி செய்துள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்