28 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிய SpaceX

4 வைகாசி 2025 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 121
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) வெற்றிகரமாக 28 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது.
ஃப்ளோரிடா மாநிலத்தின் Cape Canaveral Space Force Station-ல் உள்ள Launch Complex-40இலிருந்து மே 1 இரவு 9:51 (EDT) மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 ரொக்கெட் விண்ணுக்கு பாய்ந்தது.
Starlink 6-75 எனப் பெயரிடப்பட்ட இந்த பணியில், 28 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக குறைந்த நிலவெளி வட்டப்பாதையில் (LEO) வெளியேற்றப்பட்டன.
இந்த செயற்கைக்கோள்கள் உலகளாவிய உயர்தர இணைய வசதியை வழங்கும் நோக்கில், ஸ்பேஸ் எக்ஸின் megaconstellation-ல் இணைக்கப்படுகின்றன.
இதன்மூலம், வாடிக்கையாளர்கள் வானத்தை நோக்கிய உபகரணங்கள் மூலம் இணைய இணைப்பைப் பெற முடியும்.
மூல ரொக்கெட் B1080 8 நிமிடங்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள Just Read the Instructions ட்ரோன் ஷிப்பில் 18வது முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதில் 12வது முறை ஸ்டார்லிங்க் பணி சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இதுவரை இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 51-வது ஸ்டார்லிங்க் பணி மற்றும் 34-வது ஃபால்கன் 9 ரொக்கெட் ஏவுதல் ஆகும்.
மேலும், 2025-ல் இரண்டு ஸ்டார்ஷிப் சோதனை ஏவுதல்களும் இடம்பெற்றுள்ளன. இது ஸ்பேஸ் எக்ஸின் வேகமான வளர்ச்சி மற்றும் வணிக விண்வெளி முயற்சிகளை வெளிப்படுத்துகிறது.