மாயமாகிய பந்தைய விமானம்! - நீடிக்கும் மர்மம்!
20 ஆடி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 19239
நீடிக்கும் மர்மம்... திடுக்கிடும் தகவல்கள் என தலைப்பு போட்டு செய்தி போட்டால்.. அடுத்த ஒரு வாரத்துக்குள் காணாமல் போன விமானத்தை கண்டு பிடித்துவிடுவார்கள். அது இப்போதிருக்கும் வசதி. முதலாம் உலகப்போர் முடிவடைந்த பின்நாட்களில், ஒரு விமானம் காணாமல் போய்விட்டது. என்னாச்சோ... ஏதாச்சோ?! இன்னமும் நீடிக்கிறது மர்மம்!
இது நடந்தது 1927ல். பரிசில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு இடைவிடாது பயணிக்கக்கூடிய விமானத்தில் (கடலின் மேல்) பயணம் செய்து காட்டினால் 25,000 யூரோக்கள் பணப்பரிசு என ஒரு நிறுவனம் அறிவித்தது. பறந்தால் போச்சு.... என ஆயத்தமாகியவர்கள் இருவர். Charles Nungesser மற்றும் François Coli. இருவரும் முதலாம் உலகப்போரில் போர்விமானங்களின் விமானியாக இருந்தவர்கள். 1927ல், 25 ஆயிரம் யூரோக்கள் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது?? ஆனால் அது பெரும் விபரீதத்தில் போய் முடிந்தது.
அந்த விமானத்துக்கு L'Oiseau Blanc (வெள்ளை பறவை) என பெயர். ஏப்ரல் 1927ல் விமானம் பரிசில் இருந்து கிளம்பியது. விமானத்தில் நிரப்பப்பட்ட எரிபொருள் போக, 4000 லிட்டர் எரிபொருள் கையோடு எடுத்துக்கொண்டார்கள். தேவையான சாப்பாடு... உடை.. விமானத்துக்குள் 'அட்டாச்ட்' செய்யப்பட்ட கழிவறை. 'வெற்றிவேல்... வீரவேல்... போர்... ஆமாம் போர்!' என கிளம்பியவர்கள்... இப்போது எங்கே என தெரியவில்லை!!
ஆளும் இல்லை... அட்ரசும் இல்லை!! இறுதியாக விமானம் நடு கடலின் மேல் பறந்துகொண்டிருந்தது என்பது சிலருக்கு தெரிந்திருந்தது. பின்னர் ஒரு மாதம் கழித்து... விமானம் நியூ யார்க்கை வந்தடையவில்லை என்பதை தெரிந்துகொண்டு.. கப்பல்களில் தேடிப்பாத்தார்கள். கிடைக்கவில்லை. ஒரு துரும்பு கூட சிக்கவில்லை!!
90 வருடங்கள் ஓடிவிட்டன. இறந்தவர்களுக்கு வைக்கப்பட்ட அஞ்சலி சிலை தான் மீதமிருக்கிறது. காணாமல் போன விமானம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது!!