ஒரே போட்டியில் ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்த கோஹ்லி

4 வைகாசி 2025 ஞாயிறு 17:16 | பார்வைகள் : 118
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் RCB வீரர் விராட் கோஹ்லி பல சாதனைகளை முறியடித்தார்.
நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியில் விராட் கோஹ்லி (Virat Kohli) 33 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த அரைசதம் மூலம் ஐபிஎல்லில் அதிக அரைசதங்கள் அடித்த டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்தார். இருவரும் 62 அரைசதங்கள் அடித்துள்ளனர்.
அதேபோல், கோஹ்லி ஐபிஎல் தொடரில் 8500 ஓட்டங்களை பூர்த்தி செய்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையைப் படைத்தார்.
அதுமட்டுமின்றி கோஹ்லி மேலும் சில சாதனைகளையும் செய்துள்ளார்.
CSK அணிக்கு எதிராக மட்டும் 1,146 ஓட்டங்கள் சேர்த்து, ஒரே அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையை படைத்தார்.
ஒரு அணிக்காக 300 சிக்ஸர்களை டி20யில் அடித்த வீரர் விராட் கோஹ்லி மட்டும்தான். அவருக்கு அடுத்த இடத்தில் 263 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் உள்ளார்.
ஒரே மைதானத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் (151) மற்றொரு சாதனையையும் கோஹ்லி (154) முறியடித்துள்ளார்.
ஐபிஎல்லின் 8 சீசன்களில் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர் விராட் கோஹ்லிதான்.