சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா?

4 வைகாசி 2025 ஞாயிறு 16:46 | பார்வைகள் : 155
சூர்யா நடித்த ’ரெட்ரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் தொடங்காத நிலையில் 85 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகிவிட்டதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த படத்தின் வசூலும் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யா அடுத்ததாக 'லக்கி பாஸ்கர்’ என்ற திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும், இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் 85 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக கூறப்படுவது திரையுலக வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பே தொடங்காத நிலையில் இத்தனை பெரிய அளவிலான வியாபாரம் நடைபெறுவது கோலிவுட் திரை உலகில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது--