சிக்கன் சால்னா...

4 வைகாசி 2025 ஞாயிறு 18:04 | பார்வைகள் : 121
மதுரை ஸ்டைலில் செய்யக்கூடிய சிக்கன் சால்னாவை அச்சு அசலான மதுரை சுவையிலேயே வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாமா.
முதலில் சால்னாவிற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால், 1/2 kgசிக்கன், 1/4kgசின்ன வெஙகாயம், 1/4lஎண்ணெய், 1 smallகடல் பாசி, 1smallபட்டை, 1பிரிஞ்சி இலை, 3 ஸ்பூன்குழம்பு பொடி, 1 ஸ்பூன்காஷ்மீர் மிளகாய் பொடி, 2 ஸ்பூன்மல்லி பொடி, 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்.
தேங்காய் அரைப்பதற்கு : அரை மூடி துருவிய தேங்காய், தேவையானஅளவு முந்திரிப்பருப்பு, 2 டீஸ்பூன் கசகசா, 10 வெங்காயம் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
சூடான கடாயில் பிரிஞ்சு இலை, பட்டை, ஏலக்காய், கடல்பாசி தாளித்து விட்டு சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 10 பூண்டு ஒரு சிறிய இஞ்சி இவை இரண்டையும் நன்றாக ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக தாளித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் கோழி கறியை சேர்த்து நன்றாக தாளித்து விடவும். காஷ்மீர் மிளகாய் பொடி, மல்லி பொடி, குழம்பு பொடி போன்ற அனைத்து மசாலா பொடிகளையும் இத்துடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் கரைசலையும் சேர்த்து விடவும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரையும் சேர்த்துக் நன்றாக வதக்க வேண்டும் கொள்ளவும்.
சால்னா ஒரு கொதி வந்தவுடன் அரைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கினாள் சால்னா நன்றாக மணமாக இருக்கும். சால்னா குக்கரில் செய்வதால் இரண்டு விசில் விடவும். அப்போதுதான் கறி நன்றாக வேகும்.இரண்டு விசில் விட்டவுடன் ஆவி போனவுடன் குக்கர் மூடியை ஓபன் பண்ணி பார்த்தா மதுரை ஸ்டைல் சால்னா தயாராகிவிடும்.