போலியான வீட்டுவாடகை வசூல்: €90,000 நட்டம்! சுமார் 70 பேர் பாதிப்பு!

4 வைகாசி 2025 ஞாயிறு 21:38 | பார்வைகள் : 856
நிக்கொலா எம் (Nicolas M) என்ற 40 வயதுடைய ஆண், பரிஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பலரை ஏமாற்றி, அவர்களிடம் முற்பணம் மற்றும் வாடகைகளை வசூலித்துள்ளார்.
அவர் போலியான வாடகை ஒப்பந்தங்களை தயாரித்து, உண்மையான அடையாள அட்டையை மட்டும் பயன்படுத்தி, ஆண்டுக்கு 20,000 முதல் 25,000 யூரோக்கள் வரை சம்பாதித்துள்ளார். 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், அவர் 70 பேரை ஏமாற்றி, கிட்டத்தட்ட 90,000 யூரோக்களை சம்பாதித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, நீதிமன்றத்தில், அவர் தனது குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ஆண்டுகள் நிபந்தனக்குட்பட்டது.
இது போலியான வீட்டு உரிமையாளர்கள் குறித்தும் மற்றும் வீடு வாடகைகள் கொடுக்கும்போது முறையான பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.