அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் திடீர் நிலநடுக்கம்

5 வைகாசி 2025 திங்கள் 08:53 | பார்வைகள் : 177
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.2 புள்ளிகளாக பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சிறிய அசைவினை எதிர்கொண்டபோது பாரியளவிலான உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதே போல நியூ மெக்சிகோ ஒயிட்ஸ் நகரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.
ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.