இது நியாயமா பிரான்சுவா ஓலாந்து?!
17 ஆடி 2016 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 22585
பிரெஞ்சு புதினம் எதாவது அரசியல் கட்டுரை வெளியிடுகிறதா? என யோசிக்காதீர்கள்... இது அரசியல் 'லிஸ்ட்'டில் வராது!! சில விஷயங்கள் இப்படித்தான் ஜீரணிக்க முடியாமல் தலையை பிய்த்துக்கொள்ள வைக்கும். பின்னே... பிரான்சுவா ஓலாந்துவின் தலைமுடியை திருத்துபவருக்கு மாதம் 10,000 யூரோக்கள் சம்பளம் என்றால் மயக்கம் வராதா?!
கடந்த வாரத்தில், உதைப்பந்தாட்ட போட்டிகள் எப்படி பரபரப்பை கிளப்பியோ.. அதே போல் இந்த தகவலும் அத்தனை பரபரப்பை கிளப்பியது. மாதத்துக்கு 9,895 யூரோக்கள் அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறதாம். பிரபல துப்புத்துலக்கும் பத்திரிகையான Le Canard Enchaine முதலில் இந்த செய்தியை வெளியிட, பின்னர் அது ஒரு சில முக்கிய புள்ளிகளால் ஊர்ஜிதமாகியிருக்கிறது.
The New York Times வெளியிட்டுள்ள செய்தியில் 'பிரெஞ்சு அமைச்சர்களின் மாத சம்பளம், பிரான்சுவா ஓலாந்தின் முடி திருத்துனருக்கும் வழக்கப்படுகிறது!' என தெரிவித்துள்ளது. உண்மைதான்... இங்கு அமைச்சர்களுக்கும் அதே சம்பளம் தான்!! இந்த செய்தி குறித்து பல உலக மீடியாக்கள் செய்தி எழுதி தள்ளியுள்ளது!!
பிரான்சுவா ஓலாந்து 10,000 யூரோ சம்பளம் கொடுப்பது அத்தனை பெரிய விஷயமல்ல... ஆனால் அவர் தலையில் "என்ன'' இருக்கிறது என்று இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்?! என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கேட்கின்றனர்!! நாங்கள் கேட்கவில்லை...!!
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan