விஜயின் ‘ஜனநாயகன்’ படக்குழு மீது புகார்…

5 வைகாசி 2025 திங்கள் 10:49 | பார்வைகள் : 158
கொடைக்கானலில் ஜனநாயகன் படக்குழுவினர் தடையை மீறி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கொடைக்கானலில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் “ஜனநாயகன்” படப்பிடிப்பில் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிக்கு 1 லிட்டர் மற்றும் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை அரசு அதிகாரிகள் சோதனையிட்டு பறிமுதல் செய்வதுடன், பசுமை வரியும் விதித்து வருகின்றனர்.
இதனிடையே கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி கிராம மலை உச்சியில் விஜய்யின் “ஜனநாயகன்” பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் அரசால் தடை செய்யப்பட்ட 1 லிட்டர் மற்றும் 2 லிட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது விஜய் கொடைக்கானலில் “ஜன நாயகன்” படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.