மார்செய்யில் துப்பரவுத் தொழிளார்கள் தாக்குதல் - போதைக்கும்பல்!

5 வைகாசி 2025 திங்கள் 11:26 | பார்வைகள் : 2932
மார்செய் நகரத்தின் 14வது பிரிவில், வாகனத்தில் குப்பை சேகரிக்கும் தொழிளாளிகள் இருவர் பலமான கத்திக்குத்துத் தாக்குதலிற்கு உள்ளாகி உள்ளனர்.
இவர்கள் எடுக்க வந்த குப்பைத் தொட்டியினுள், குற்றவாளிகள் போதைப் பொருள் பொதிகளை ஒளித்து வைத்து இருந்தமையால், தொழிலாளர்கள் அந்தக் குப்பைத் தொட்டியை எடுக்கும்போது, அவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.
முகத்தை முகக்கவசத்தால் மறைத்தபடி வந்த நால்வரே இவர்களைத் தாக்கியுள்ளனர். இது பெரிய போதைக் கடத்தல் கும்பல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திகளால் பலமாகத் தாக்கப்பட்ட இவர்கள் படுகாயமடைநதுள்ளனர்.
இந்த நகரத்தின் தலைவர் இதனைக் கண்டித்ததுடன், இப்படியான சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன எனவும், இவற்றைத் தடுக்கக் காவற்துறையினர் தவறி விட்டனர் எனவும் கண்டித்துள்ளார்.
மார்செய் நகரத்தில் இப்படியான குற்றங்களும் படுகொலைகளும் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே உள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025