வீட்டில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்.. சட்டம் என்ன சொல்கிறது..?

5 வைகாசி 2025 திங்கள் 13:00 | பார்வைகள் : 1603
பிரெஞ்சு மக்கள் வீடுகளில் அதிகபட்சமாக எவ்வளவு பணத்தினை வைத்திருக்க முடியும்..? பிரான்சின் புதிய சட்டம் இது தொடர்பில் என்ன சொல்கிறது..?
வீடுகளில் ரொக்கமாக பணத்தினை வைத்திருக்க பிரெஞ்சு சட்டம் அனுமதிக்கிறது. இருந்தபோதும் அதற்கு ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பணத்தினை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்வதிலும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆய்வின் படி பிரெஞ்சு மக்கள் 132.5 பில்லியன் யூரோக்களை பணமாக வீடுகளில் வைத்திருப்பதாகவும், அதுவே 2020 ஆம் ஆண்டில் நபர் ஒருவருக்கு சராசரியாக 3.000 யூரோக்கள் படி 225 பில்லியன் யூரோக்கள் பணமாக வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நபர் ஒருவர் 10,000 யூரோக்கள் ரொக்கமாக வைத்திருக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுகிறது.
2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி நாட்டு மக்களில் 78% சதவீதமானவர்கள் வீடுகளில் 1,000 யூரோக்களுக்கும் குறைவாக பணம் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.