பிரான்சுக்கு புதுவரவு!
16 ஆடி 2016 சனி 11:12 | பார்வைகள் : 19165
இதையெல்லாம் செய்தி ஆக்கணுமா?! என கேட்டால்... இதையெல்லாம் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறோம்!
பிரான்சின் Moselle நகரின் Amneville பகுதியில் உள்ள பிரபல மிருகக்காட்சி சாலையில், ஒரு வெள்ளை நிற Rhino குட்டி ஒன்றை ஈன்றிருக்கிறது. அதனால் மிருகக்காட்சி சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் சந்தோசத்தில் துள்ளி குதிக்கிறார்களாம்?!
உலகத்தில் அருகி வரும் உயிரினமாக வெள்ளை Rhino விலங்கு இருக்கிறது. கிட்டத்தட்ட 20,000 வெள்ளை Rhinoக்கள் மாத்திரமே உலகம் முழுவதும் இருக்கின்றன. நாம் மீண்டும் Amneville Zooவுக்கு க்கு செல்வோம். தாயும் சேயும் நலம். பிறந்தது ஒரு பெண் Rhino குட்டி ஆகும். குட்டியின் எடை 40 கிலோ ஆகும். தாய் மற்றும் தந்தை Rhinoவான Benny மற்றும் Yoruba இருவரும் (??!) மிகவும் சந்தோசத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த வெள்ளை Rhino க்களின் பூர்வீகம் தெற்கு ஆப்பிரிக்கா ஆகும். மிக வேகமாக அருகி வரும் உயிரனமான வெள்ளை Rhinoவுக்கு புது பெண்குட்டி பிறந்ததால், இது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் என மிருகக்காட்சி சாலை அதிகாதி தெரிவித்துள்ளார். புதிய வரவான Rhino குட்டிக்கு, "பயாமி" (Bayami) என பெயர் சூட்டியிருக்கிறார்கள். குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கிறதாம். சுனாமியே வந்தாலும் எதிர்த்து நிக்குமாம் பயாமி!!