வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்காக 100 மில்லியன் யூரோக்கள் முதலீடு: இம்மானுவேல் மக்ரோன்!

5 வைகாசி 2125 சனி 14:55 | பார்வைகள் : 331
வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை முக்கியமாக அமெரிக்காவைச் சேர்ந்தவர்களை பிரான்சில் வரவேற்கும் முயற்சியில், 100 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்யவுள்ளதாக இன்று ஜனாதிபதி இம்னுவல் மக்ரோன் "Choose Europe for Science" என்ற மாநாட்டின் முடிவில் அறிவித்துள்ளார்.
இதற்காக “France 2030” என்ற பொது முதலீட்டு திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும். இம்மாநாட்டில் உரையாற்றிய மக்ரோன், அறிவியல் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்று கூறி, அமெரிக்காவில் நடந்த அறிவியல் நிதியிழப்பு மற்றும் விசா கட்டுப்பாடுகளுக்கு எதிராக விமர்சனம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியமானது 2025-2027 காலப்பகுதியில் 500 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இது ஐரோப்பாவை உலகிலேயே ஆராய்ச்சிக்கான முக்கிய மையமாக மாற்றும் நோக்கத்தை கொண்டுள்ளது.
மேலும், 7 ஆண்டுகள் நீடிக்கும் மானியங்களையும், மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகைகளையும் இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவிருக்கிறது. 2030க்குள் ஐரோப்பா, GDP-வில் 3% வரை ஆராய்ச்சி முதலீட்டை உயர்த்தும் திட்டத்தையும் முன்வைத்துள்ளது.