டோக்கியோவுக்குச் சென்ற ஈஃபிள் கோபுரம்!
15 ஆடி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19384
பிரித்தானியாவில் ஒரு போலி ஈஃபிள் கோபுரம் இருக்கிறது என ஏலவே 'பிரெஞ்சு புதினங்கள்' தெரிவித்திருந்தது. இன்று ஜப்பானில் இருக்கும் ஒரு போலியான ஈஃபிள் கோபுரத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
இதற்கு ''東京タワー'' என பெயர். உங்களுக்கு ஜப்பானிஸ் படிக்க சிரமம் என்றால், அதை 'டோக்கியோ கோபுரம்' என தமிழில் மொழி பெயர்க்கலாம்!
இந்த டோக்கியோ கோபுரம், ஜூன் மாதம் 1957ல் தனது கட்டுமான பணிகளை ஆரம்பித்து, அடுத்த வருடமே... அதாவது டிசம்பர் 23, 1958 ஆம் ஆண்டு திறப்புவிழா செய்யப்பட்டது. அதை ஒரு பக்கம் வைத்துவிடலாம். இக்கோபுரத்தின் வரலாறுகளில் கவனம் செலுத்த தேவையில்லை. ஆனால் இக்கோபுரம் அப்படியே பரிசின் ஈஃபிள் கோபுரத்தை ஒத்து இருக்கிறது.
பிரான்சின் ஈஃபிள் கோபுரம் மக்களால் பெரிதும் கவரப்பட்டு, சுற்றுலாப்பயணிகள் வந்து குவிய, "நாங்களும் கட்டுவோம் ஈஃபிள்" என ஜப்பானின் மிகப்பெரிய வியாபார நிறுவனமான 'Nihon Denpatō' நிறுவனம் 2.8 பில்லியன் 'ஜென்'களை கொட்டி கட்டி முடித்தது.
இந்தியாவில் ஊட்டி மலையை போல், 'நீலகிரி மலை' என ஒன்று பெங்களூர் செல்லும் சாலையில் இருக்கிறது. அதை 'ஏழைகளின் ஊட்டி' என அழைப்பார்கள். அதே கதை தான் இந்த 'டோக்கியோ டவ'ருக்கும் ஏற்பட்டுள்ளது.
"சும்மா போங்க பாஸ்... இது தான் எங்களுக்கு ஈஃபிள்!!" என்கிறார்கள் ஜப்பான் மொழியில்!!