Paristamil Navigation Paristamil advert login

SNCF வேலைநிறுத்தம் அதன் போட்டியாளர்களுக்கு நன்மை அளிக்கிறதா?

SNCF வேலைநிறுத்தம் அதன் போட்டியாளர்களுக்கு நன்மை அளிக்கிறதா?

5 வைகாசி 2025 திங்கள் 16:43 | பார்வைகள் : 552


SNCF நிறுவனம் நடத்தும் வேலைநிறுத்தம் மே 8 உடன் சேர்ந்து வருவதால், பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வழிகளை தேட தொடங்கியுள்ளனர். 

SNCFஇன் போட்டி நிறுவனங்களான Trenitalia, BlaBlaCar Bus மற்றும் Flixbus போன்றவற்றில் பயணத்தொகை மற்றும் முன்பதிவுகள் மிக விரைவாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, பரிஸ்-லியோன், பாரிஸ்-மார்செய், மற்றும் பரிஸ்-நார்மண்டி போன்ற முக்கிய வழித்தடங்களில் 20% முதல் 30% வரையிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

பேருந்துகள் தற்போது 350 சேவைகளை இயக்கி வருவதுடன், தேவைக்கேற்ப 400 ஆக உயர்த்த தயாராக உள்ளது. இதேபோல், BlaBlaCar இன் கூட்டுச் சவாரி சேவையும் பயணிகளால் அதிகம் நாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட 27% அதிகமாக இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயணத் தேடல்கள் 50% வரை அதிகரித்துள்ளது. 

மே 7 முதல் 11 வரை, சாதாரண வாரத்துடன் ஒப்பிடும்போது 30% முதல் 50% வரையிலான முன்பதிவுகளின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து  விலை அதிகம் மற்றும் இருக்கைகள் குறைவாக இருப்பதால், அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை என்று Kombo நிறுவனம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்