போலி ஈஃபிள் கோபுரம்!

13 ஆடி 2016 புதன் 10:38 | பார்வைகள் : 22494
எங்கெல்லாம் ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ... அங்கெல்லாம் அதை ஒட்டிய போலிகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு இடம் பொருள் என்ற பேதமில்லை. பல நிறுவனங்களின் தொலைபேசிகளை அச்சொட்டாக போலியாக தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களும் உண்டு. அதுபோல் எந்த 'Brand' ஆக இருந்தாலும்... அதற்கு நிகராக போலிகளும் உருப்பெறும். ஈஃபிள் கோபுரமும் விதிவிலக்கு இல்லை!!
ஈஃபிளுக்கு பல போலி கோபுரங்கள் உண்டு. ரொம தொலைவெல்லாம் போகவேண்டாம்... அருகில் பிரித்தானியாவிலேயே இருக்கிறது ஒரு போலி ஈஃபிள்.
இங்கிலாந்தின் Lancashire நகரில் உள்ள, Blackpool நகரில் இந்த கோபுரம் அமைந்திருக்கிறது. அதனாலேயே இதற்கு Blackpool Tower என பெயர் வைத்துவிட்டார்கள். ஈஃபிள் கோபுரம் கட்டிமுடித்த பத்துவருடங்களுக்குள்ளாகவே இந்த கோபுரத்தையும் கட்டி முடித்துவிட்டார்கள். அதாவது மே மாதம், 14ம் திகதி 1894 ஆண்டு. அது நம்நாட்டு சமாச்சாரம் இல்லை என்பதால் அது குறித்த தகவல்களை விட்டு விடலாம்.
ஈஃபிள் கோபுரத்தில் 'பாதிப்பில்' கட்டியிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டாலும்... அதை அழகாய் கட்டுவதற்கு தவறியிருக்கிறார்கள். உண்மையில் அந்த கோபுரம் அத்தனை அழகில்லை. ஈஃபிள் கோபுரத்துக்கு கிட்டேயும் வராது. தொடர்ந்து அது சுற்றுலாத்தமாகவும் இல்லை.
இது மட்டும் போலி ஈஃபிள் இல்லை... இன்னமும் இருக்கிறது. 'சீனா என்றால் போலி என்றும், ஜப்பான் என்றால் உயரிய தயாரிப்பு' என்றும் அறிந்துள்ள நாம் இங்கே கொஞ்சம் தடுமாறுகிறோம். ஆம்.. ஜப்பானில் இருக்கிறது மற்றுமொரு போலி ஈஃபிள் கோபுரம்!! அது குறித்து நாளை பார்க்கலாம்!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025