Paristamil Navigation Paristamil advert login

சைக்கிள் ஓட்டி 63 வயதான இலங்கையர் படைத்த சாதனை

சைக்கிள் ஓட்டி 63 வயதான இலங்கையர் படைத்த சாதனை

6 வைகாசி 2025 செவ்வாய் 11:12 | பார்வைகள் : 130


அவுஸ்திரேலியாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட காமினி சந்திரசேகர (Gamini Chandrasekara), துவிச்சக்கர வண்டியில் சென்று சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மேற்கிலிருந்து கிழக்கு கடற்கரை வரையான கிட்டத்தட்ட 5000 கி.மீ தூரத்தை தனது துவிச்சக்கர வண்டியில் கடந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

63 வயதான காமினி சந்திரசேகர, கடந்த மார்ச் 22 அன்று பெர்த்தில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமை பிற்பகல் (மே 3) பிரிஸ்பேனின் நகர தாவரவியல் பூங்காவை சென்றடைந்துள்ளார்.

அவர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முதல் 140 கி.மீ. பயணித்துள்ளார். முழு சவாரிக்கும் அவருக்கு மூன்று ஓய்வு நாட்கள் உட்பட 42 நாட்கள் ஆனது.

பயணித்தின் போது அதிக வெப்பம், பலத்த காற்று, நுளம்புகள், சீரற்ற பாதைகள், வன விலங்குகள் போன்றவற்றின் சவால்களை எதிர்கொண்டாகவும் (Gamini Chandrasekara ) அவர் கூறினார்.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்