ஊர் பெயரை சொல்ல கூச்சப்படும் கிராமத்தினர்! - விசித்திர வழக்கு!!
12 ஆடி 2016 செவ்வாய் 10:49 | பார்வைகள் : 19612
சிலருக்கு இப்படித்தான்... எங்கிருந்தெல்லாமோ பிரச்சனை வரும்..!! இதோ... இந்த வழக்கை பாருங்களேன்.. பிரான்சில் இருக்கும் ஒரு ஊர். அந்த ஊர் மக்களுக்கு தங்களின் ஊர் பெயரை சொல்ல வெட்கமாக இருக்கிறதாம். அப்படி என்ன பெயர்??!! அதை நாங்கள் சொல்கிறோம்!!
அந்த ஊரின் பெயர் Trécon ஆகும். சரி... இந்த பெயரில் அப்படி என்ன இருக்கிறது?! Trés con என்றால் 'Very Stupid' ( மிகவும் முட்டாள்தனம்) என அர்த்தம். யாராவது இவ் ஊர்க்காரர்களை, 'எங்கே வசிக்கிறீர்கள்?!' என கேட்டால், 'நாங்கள் மிகவும் முட்டாள்தனமான ஊரில் வசிக்கிறோம்!' என பதில் சொல்ல முடியுமா??! இதனால் ஊர் பெயரை சொல்வதையே விட்டுவிட்டார்களாம். அட பாவமே??!!
சரி, முட்டாள் தனமான நகரின் மேயர், Georges Leherle என்ன சொல்கிறார்?! 'நான் எங்கே வசிக்கிறேன் என்பதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் எனது ஊரை நினைத்து பெருமைப்படுகிறேன்!' என 'நான் அழலியே... கண்ணு வேர்க்குது!' என்ற ரீதியில் Le Parisian பத்திரிகைக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் அவர் கடைசி வரை ஊர் பெயரை சொல்லவே இல்லை, அதை விட்டுவிடுவோம்.
இதுபோல் பிரான்சில் பல ஊர்கள் உள்ளன. வித்தியாசமான்ன நகைச்சுவையான பெயர்களை எல்லாம் கொண்டு. இப்படியான பெயர்களுக்கு பின்னால் உள்ள காரணம், சுற்றுலாப்பயணிகளின் கவனத்தைப் பெறந்தானாம்.
இந்த Trécon இன் பக்கத்து ஊர்க்காரர்கள் எல்லாம் இந்த ஊர்க்காரர்களை பார்த்து, கிண்டல் கேலி எல்லாம் செய்கிறார்களாம். இப்படி ஒரு விசித்திர வழக்கை கண்டு திருதிருவென முழிப்பதை தவிர நாம் என்ன செய்யமுடியும்!!