மூன்றாம் உலக யுத்தம் வரலாம்.. பிரெஞ்சு மக்கள் அதிர்ச்சியில்..!!

6 வைகாசி 2025 செவ்வாய் 13:19 | பார்வைகள் : 727
மூன்றாம் உலகப்போர் ஒன்று மூளும் அபாயம் உள்ளதாக பிரான்சில் வசிக்கும் இரண்டில் ஒருவருக்கும் அதிகமானோர் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் மூன்றாவது உலக யுத்தம் இடம்பெறும் அபாயம் உள்ளதாக 55% சதவீதமானவர்கள் நம்புகின்றனர். உலகப்போர் மூள 13% சதவீதமானவர்கள் 'சாத்தியம்' உள்ளதாகவும், 42% சதவீதமானவர்கள் 'மிகவும் சாத்தியம்' தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மூன்றாம் உலகப்போரில் அணு ஆயுதம் பயன்படுத்துவார்கள் என 57% சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னர் எப்போதும் நிகழ்ந்திராத பெரும் சேதத்தை இந்த மூன்றாம் உலக யுத்தம் ஏற்படுத்தும் என 73% சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
*
இந்த கருத்துக்கணிப்பை YouGov எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதில் 18 வயது நிரம்பிய 1,001 பேர் கலந்துகொண்டுள்ளனர்.