உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு - பதிவான வாக்குகளின் சதவீதம்

6 வைகாசி 2025 செவ்வாய் 14:20 | பார்வைகள் : 180
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.
2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானது.
வாக்குப்பதிவு மாலை 4:00 மணி நிறைவடைந்த நிலையில், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணி வரையிலான நிலவரப்படி, பதுளை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், களுத்துறை மாவட்டத்தில் 55 சதவீத வாக்குகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், மன்னார் மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகளும், குருநாகல் மாவட்டத்தில் 51 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் 55 சதவீத வாக்குகளும், திகாமடுல்ல மாவட்டத்தில் 63 சதவீத வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 61 சதவீத வாக்குகளும் வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 56.6 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 61 சதவீத வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், கண்டி மாவட்டத்தில் 55 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், கேகாலை மாவட்டத்தில் 58 சதவீத வாக்குகளும், திருகோணமலை மாவட்டத்தில் 68 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.