Paristamil Navigation Paristamil advert login

மாலத்தீவு ஜனாதிபதியின் 15 மணி நேரம் செய்தியாளர்களுடன் சந்திப்பு

மாலத்தீவு ஜனாதிபதியின் 15 மணி நேரம் செய்தியாளர்களுடன் சந்திப்பு

6 வைகாசி 2025 செவ்வாய் 16:00 | பார்வைகள் : 184


நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலத்தீவு ஜனாதிபதி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மாலத்தீவின் 46 வயது ஜனாதிபதி முகமது முய்சு, 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு தொடர் செய்தியாளர் சந்திப்பை நடத்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

ஜனாதிபதி முய்சு தனது இந்த முன் அறிவிப்பில்லாத பத்திரிகையாளர் சந்திப்பை முந்தைய நாள் காலை 10 மணிக்கு தொடங்கினார்.

அவர் நள்ளிரவு வரை செய்தியாளர்களுடன் உரையாடினார், இறுதியில் அவரது  இந்த செய்தியாளர் சந்திப்பு 14 மணி நேரம் 54 நிமிடங்கள் நீடித்தது, இது ஒரு புதிய உலகளாவிய சாதனையாகும்.

இந்த சாதனைக்கு முன்பு, உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி 14 மணி நேரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்ததே சாதனையாக இருந்தது. ஜனாதிபதி முய்சுவின் இந்த நீண்ட நேர சந்திப்பு அந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்