‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால் ?

6 வைகாசி 2025 செவ்வாய் 16:14 | பார்வைகள் : 136
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் பற்றியும் மிகவும் பிரபலமானவர் நெல்சன். இவரது இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ரஜினிக்காக தரமான கதையை தயார் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தார் நெல்சன். அந்த அளவிற்கு இந்த படம் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி, நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படமும் உருவாகி வருகிறது
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். எஸ்.ஜே. சூர்யா, பஹத் பாசில், செம்பன் வினோத் ஆகியோரும் படத்தில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேசமயம் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் நெல்சன், மோகன்லாலை நேரில் சந்தித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது
அதாவது ஜெயிலர் முதல் பாகத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இவர்கள் வரும் காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும் திரையரங்கையே அதிர வைத்தது. அதேபோல் மோகன்லால் – சிவராஜ்குமார் இருவரும் ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவராஜ் குமார் பேட்டி ஒன்றில் தான் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்தார்.
ஆனால் மோகன்லால் பேட்டி ஒன்றில், தன்னை இதுவரை யாரும் அழைக்கவில்லை என்றும் அழைத்தால் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ‘ஹிருதயபூர்வம்’ படப்பிடிப்பில் நெல்சன், மோகன்லாலை சந்தித்து பேசி இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மோகன்லால், ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தந்துள்ளது.