முகம் பொலிவாக இந்த ஒரு தண்ணீ போதும்...

6 வைகாசி 2025 செவ்வாய் 17:14 | பார்வைகள் : 127
முகம் பொலிவாகவும்,பளபளப்பாகவும் மாற வேண்டும் என்று நினைப்போம். அதற்கு தரமற்ற மருந்துகளை ஆன்லைன் விளம்பரங்களைப் பார்த்து நல்லா இருந்த சருமத்தை கோலாருக்கி சிலர் அதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கி கொள்வர்.. சரி.. இப்போ முகம் பொலிவாகவும் மாறனும் சைட் எஃபெக்ட்-ம் வரக் கூடாதுனு நினைக்கிரவரங்களுக்கு அரிசி தண்ணீர் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதோடு அரிசி நீரில் உள்ள சில பொருட்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், கரும்புள்ளிகளை குறைக்கும் அப்படினும் கூறப்படுகிறது.
அரிசி நீர் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சர்பத்தை குறைவுடன் வைத்துக் கொள்ளக்கூடிய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் உள்ளது. முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள பல நூற்றாண்டுகளாக அரிசி தண்ணீரில் முகம் கழுவுவது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
இதனால் இது ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்பட்டு சருமத்தை வறண்டு போகாமல் தடுக்கும் என கூறப்படுகிறது. அரிசி நீரில் உள்ள சில கூறுகள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
எப்படி பயன்படுத்துவது: அரிசியை நன்றாக கழுவவும். அதிகப்படியான தண்ணீரை ஊற்றிவிட்டு, முதல் முறை கழுவிய தண்ணீரை தனியாக எடுக்கவும் (இதில் அதிகப்படியான மாவுச்சத்து இருக்கும்). இரண்டாவது அல்லது மூன்றாவது முறை கழுவிய தண்ணீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் சேகரிக்கவும். இதுதான் நீங்கள் முகத்திற்கு பயன்படுத்தப் போகும் அரிசி நீர். இந்த அரிசி நீரை ஒரு பஞ்சில் நனைத்து உங்கள் முகத்தில் மெதுவாக தடவவும். அது இயற்கையாக உலரட்டும். விரும்பினால், 20-30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.