Paristamil Navigation Paristamil advert login

'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Maurice Jarre!!

'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Maurice Jarre!!

11 ஆடி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 18409


சில மனிதர்கள் ஒரு துறையில் விடப்பிடியாய் இருப்பார்கள். அதில் அதிக திறமையுடன் இருப்பார்கள். அப்படி தன் துறையில் முழுத்திறமையாக இருக்கும் மனிதர்கள் பின்னாட்களில் சிகரம் தொட்ட மனிதர்கள் ஆகிவிடுகின்றனர். Maurice Jarreஐ போல...!! 
 
20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இசையமைப்பாளர் Maurice Jarre. பல திரைப்படங்களுக்கும், மேடை நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர். தன் வாழ்நாளில் பல வெற்றிகளை கண்டவர். 
 
லியோன் நகரில் செப்டம்பர் 13ம் திகதி, 1924 ஆம் ஆண்டு பிறந்தார். இஞ்சினியர் படித்தவருக்கு, அப் படிப்புடன் ஒன்றிப்போக முடியவில்லை. அவருக்கு இசை மீது நாட்டம் இருப்பதை தெரிந்துகொண்ட அவருடைய தந்தை, அவரை ஒரு இசைப்பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார். இசையை கற்கிறார். ஆர்மோனியம் கற்கிறார். 
 
1961ஆம் ஆண்டு, சினிமாவுக்கான முதல் வாய்ப்பு Mauriceகு கிடைக்கிறது. இயக்குனர் David Leanஇன் இயக்கத்தில் வெளிவந்த, பிரிட்டிஷ் திரைப்படமான  'Lawrence of Arabia' திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். தன் முதல் திரைப்படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்றுக்கொள்கிறார். அந்த படத்துக்கான வாய்பு உண்மையில் Mauriceக்கு மிகப்பெரும் திருப்புமுனையாகவும், 'பெஞ்ச் மார்க்' திரைப்படமாகவும் இருந்தது. முதல் திரைப்படத்துக்கே ஆஸ்கார் விருது பெறுகிறார் என்றதும், அனைவரது கண்களும் Maurice பக்கம் திரும்புகிறது. பின்னணி இசை அத்தனை வரவேற்பை பெற... மீண்டும் இயக்குனர் Lean உடன் கூட்டணி தொடர்ந்தது. 
 
1965 ஆம் ஆண்டு, ஆங்கிலம், இத்தாலி, பிரெஞ்சில் வெளியான The Train திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். வெற்றியடைகிறது. Maurice கிராஃப்ட் ஏறிக்கொண்டே செல்ல... அடுத்தடுத்து Grand Prix, Doctor Zhivago போன்ற திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். அதிலும் Doctor Zhivago திரைப்படத்தில், வரிகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட Lara's Theme பாடல் மிகப்பெரும் வெற்றியடைகிறது. அந்த பாடல் அவருக்கு இரண்டாவது ஆஸ்காரை பெற்றுக்கொடுக்கிறது. 
 
'தி லெஜெண்ட்' என அடையாளப்படுத்தப்படும் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்குடன் இணைந்து 1969ஆம் ஆண்டு  Topaz எனும் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். முன்னர் பிறிதொரு இசையமைப்பாளர் அமர்த்தப்பட்டு, அது ஹிட்ச்காக்கு பிடிக்காமல் போகவே, அந்த வாய்ப்பு Mauriceகு கிடைக்கிறது. 'நான் உனக்கு   சிறந்த படம் தரவில்லை. ஆனால் நீ என் படத்துக்கு சிறந்த இசையை தந்திருக்கிறாய்' என ஹிட்ச்காக் கண்கலங்கி 
Mauriceஇடம் சொல்லியிருக்கிறார். 
 
இப்படியாக தன் திறமையை உலகுக்கு நிரூபித்து காட்டிய Maurice, தன் வாழ்நாளில் 3 தடவை ஆஸ்கார் விருதை பெற்றிருக்கிறார். 9 தடவை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் கோல்டன் குளோப் விருதும் பெற்றிருக்கிறார். 
 
தன் வாழ்நாளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தவர், 2001ஆம் ஆண்டு இறுதியாக Uprising எனும் தொலைக்காட்சி திரைப்படத்துக்கு இசையமைத்தார். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்ச் 28ம் திகதி, 2009 ஆம் ஆண்டு உயிரிழந்தார். 
 
கிடைத்த வாய்ப்பில் எல்லாம் தன்னை நிரூபிக்க தவறாதவர் Maurice. தன் தனிப்பட்ட வாழ்கையிலும், கலை வாழ்க்கையிலும் 'நெவர் கிவ் அப்' என உடும்புப்பிடியார் இருந்தவர்... இன்று சிகரம் தொட்ட மனிதராக மாறியிருக்கிறார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்