Paristamil Navigation Paristamil advert login

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

6 வைகாசி 2025 செவ்வாய் 17:14 | பார்வைகள் : 112


உருளைக்கிழங்கில் செய்யப்படும் உணவு வகைகளில் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது. சுவைக்காக சாப்பிடவும், பொழுதுபோக்கிற்கு சாப்பிடவும் என இரண்டிற்கும் ஏற்றதாக உள்ளது.இதனை கடையில் வாங்கி சாப்பிட்டால் போதுமானதாக இருக்காது. சாப்பிட்ட உடன் இன்னும் சாப்பிட வேண்டும் என்று வயிறு கேக்கும். இதனால் வீட்டிலேயே வயிறு நிரம்பும் அளவிற்கு மொறுமொறுவென செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:  உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய் தூள், கான்ஃபிளவர் மாவு, எண்ணெய்
இரண்டு உருளைக்கிழங்கு எடுத்து தோல்களை நீக்கி நீளம் நீளமாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து கொதித்தவுடன் நறுக்கி வைத்திருந்த உருளைக்கிழங்கு அதில் போட்டு 3 நிமிடம் வரை வேகவைக்கவும்.

வேகவைத்த உருளைக்கிழங்கினை ஒரு துணியில் மேல் வைத்து நீர் இறங்கும் வரை காய வைக்கவும். இரண்டு டேபிள் ஸ்பூன் கான்ஃபிளவர் மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் அதில் கான்ஃபிளவர் மாவுடன் சேர்த்து உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வெந்தவுடன் எடுத்தால் அதில் கொஞ்சம் உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி எடுத்தால் சூடான மொறுமொறுப்பான ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் ரெடி ஆகிவிடும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்