பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க சபாநாயகர் அறிவிப்பு

7 வைகாசி 2025 புதன் 14:27 | பார்வைகள் : 534
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவை அளிப்பதாக அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் மைக் ஜான்சன் உறுதியளித்தார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கியுள்ள நிலையில், அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் மைக் ஜான்சன் கூறியதாவது:
* இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளை ஆதரிக்க அனைத்தையும் செய்வோம்.
* பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு முழு ஆதரவை வழங்கும்.
* இந்தியாவுடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானவை. அதனை தொடர எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்.
* இந்திய நாட்டுடனான உறவின் முக்கியத்துவத்தை டிரம்ப் நிர்வாகம் தெளிவாகப் புரிந்து கொள்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தலின் முக்கியத்துவத்தை தெளிவாகப் புரிந்துகொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.