Paristamil Navigation Paristamil advert login

Toni Musulin எனும் சாரதியின் கதை!!

Toni Musulin எனும் சாரதியின் கதை!!

10 ஆடி 2016 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 19379


Toni Musulin என்று ஒருவன். குறிப்பிடு சொல்லும்படியாக எதுவும் இல்லாத ஒரு சாதாரண சாரதி. பரிசில் இருக்கும் Banque de France வங்கிக்கு வாகனம் ஓடுவது தான் அவன் வேலை. வேலையில் நேர்மையாக இருந்தாலும் போதிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது அவனுக்கு பெரும் குறையாக இருந்தது.
 
சில நண்பர்களுடன் தங்கியிருந்த Toni Musulin, வேலையில் தன்னை கொடுமைப்படுத்துவதாக சொல்லி வந்திருக்கிறான். நண்பர்களோ அவன் கதையை காதில் போட்டுக்கொள்ளுவதே இல்லை. 
 
அன்று, 2009 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம், 5ம் திகதி... Banque de France வங்கியில், தன் பணியில் இருக்கிறான். அவனுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. 'ஓவராக வேலை வாங்குகிறார்கள்' என்பதே அவன் குற்றச்சாட்டாக இருந்தது. பணம் பட்டுவாடா செய்யும் கவச வாகனம் அது. 11.6 மில்லியன் யூரோக்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு, வேறு பகுதிக்கு செல்ல தயாராக இருந்தது. எதுவும் யோசிக்காமல் வாகனத்தையும், பணத்தையும் திருடிக்கொண்டு பறந்துவிட்டான்!
 
பரபரப்பு பற்றிக்கொண்டது. காவல்துறை வலை வீசியது. இரண்டு நாட்களின் பின்னர் GPS கருவி மூலம் வாகனத்தை கண்டு பிடித்தார்கள். வாகனம் மட்டும் தான் இருந்ததது. பணமும், அவனும் கிடைக்கவில்லை. 11 நாட்கள் கழித்து, அவன் மொனாகோ காவல்நிலையத்தில் சரண் அடைகிறான். வழக்கு நடைபெறுகிறது.
 
' Toni Musulin நேர்மையானவன். குற்றம் செய்வதே அவன் எண்ணமாக இருந்திருதால், சரண் அடைந்திருக்க மாட்டான். அவன் பிரச்சனையை காது கொடுத்து கேட்காத நீங்கள் தான் குற்றவாளிகள்!' என அவன் தரப்பு வழக்கறிஞர் திறம்பட வாதிட்டார். 
 
குறைந்த பட்ச தண்டனையாக, மூன்று வருடகால சிறைத்தண்டனை கிடைத்தது Toni Musulinக்கு!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்