"ஜனாதிபதியின் பொறுப்பற்ற செயல்": சிரிய அதிபரின் வருகையை கடுமையாக விமர்சிக்கும் மரின் லூ பென்!

6 வைகாசி 2025 செவ்வாய் 20:15 | பார்வைகள் : 1629
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சிரிய அதிபர் Ahmad al-Chareh வரவேற்கும் முடிவை மரின் லெ பென் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிரிய ஜனாதிபதி அகமட் அல்-ஷரேவை, அல்-காயிடாவில் (Al-Qaïda) இருந்த ஜிகாதி என கூறிய அவர், மக்ரோனின் இந்த நடவடிக்கையை “பொறுப்பற்ற செயல் மற்றும் தீவிரவாதத்தை தூண்டும் நடவடிக்கை” என கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும், நாட்டு மக்களையும், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான அதன் நடவடிக்கைகளையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணம் அகமட் அல்-ஷரேவுக்கு ஐரோப்பாவில் நடைபெறும் முதல் பயணம் ஆகும். பிரான்ஸ் “சுதந்திரமான மற்றும் சிறுபான்மைகளை மதிக்கும் புதிய சிரியாவை” உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவு தருவதாக எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.
இருப்பினும், சமீபத்திய படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை முன்னிட்டு, இந்த புதிய அரசாங்கம் தீவிரவாதக் குழுக்களை கட்டுப்படுத்த இயலுமா? என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் RN கட்சியின் கூட்டணி தலைவரும், இதை ஒரு "அடிப்படைத் தவறு” என்றும், “அருவருப்பான ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கும் செயற்பாடு" என்றும் விமர்சித்துள்ளார்.