தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு – வடக்கு, கிழக்கில் அநுரவுக்கு மிகப்பெரிய தோல்வி!

7 வைகாசி 2025 புதன் 05:38 | பார்வைகள் : 429
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
பல இடங்களில் சபைகளை கைப்பற்றினாலும் அங்கே தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பிரதேசங்களிலும் பெரும் பின்னடைவை அந்த கட்சி சந்தித்துள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளை பெற்று 9 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 1,397 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 795 வாக்குகளை பெற்று 3 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி 265 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும், சர்வஜன பலய 177 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 4,750 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 3,874 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களையும், பொதுஜன ஐக்கிய முன்னணி 1,511 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1,279 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், சர்வஜன பலய 816 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி 5,736 வாக்குகளை பெற்று 11 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 2,934 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1,928 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 553 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும், சுயாதீன குழு மற்றும் சர்வஜன பலய தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி பலாங்கொட நகர சபையில் தேசிய மக்கள் சக்தி 4833 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 3232 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1442 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், இரண்டு சுயாதீன குழுக்கள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளள.
கண்டி மாவட்டம் வத்துகாமம் நகர சபையில் தேசிய மக்கள் சக்தி 2028 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 1289 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும், மக்கள் கூட்டணி 499 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், சர்வஜன பலய கட்சி 359 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 324 வாக்குளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை நகர சபையை சுயாதீன குழுவொன்று வெற்றிபெற்றுள்ளது. இங்கே தேசிய மக்ககள் சக்தி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி சுயாதீன குழு இலக்கம் ஒன்று 1038 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 844 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 374 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த சபையில் தேசிய மக்கள் சக்தி நான்காமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை தமிழசு கட்சி 1364 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 990 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 808 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், தேசிய மக்கள் 607 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 500 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.