மூன்றாம் நாள் வேலை நிறுத்தம்.. போக்குவரத்து பாதிப்பு விபரங்கள்!!

7 வைகாசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1027
மூன்றாவது நாளாக இன்று மே 7 ஆம் திகதி புதன்கிழமை தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பல்வேறு தொடருந்து சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
இன்றைய நாளில் RER C, RER D, RER E ஆகிய சேவைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக RER C இரண்டில் ஒன்றும், RER E சேவைகளில் மூன்றுல் ஒரு சேவையும் இயக்கப்பட உள்ளன.
**
RER D மூன்றில் ஒன்று இயங்கும் எனவும்,
Corbeil-Essonnes - Creil நகரங்களிடையே மூன்றில் ஒன்றும், Melun - Goussainville நகரங்களிடையே இரண்டில் ஒன்றில் ஒன்றும் இயக்கும்.
**
Transilien சேவைகளில் H மற்றும் N வழிச்சேவைகள் இரண்டில் ஒன்றும், J, K, P மற்றும் U வழிச்சேவைகள் மூன்றில் இரண்டும் இயங்கும்.
T12 மற்றும் T13 ஆகிய ட்ராம் சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.