யூரோ கிண்ணம் 2020!! - மீண்டும் பிரான்ஸ்!!
9 ஆடி 2016 சனி 13:53 | பார்வைகள் : 19747
நாளையுடன் 2016 ஆண்டின் யூரோ கிண்ண போட்டிகள் அனைத்தும் நிறைவு பெறுகிறது. இறுதிப்போட்டி, நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசின் Saint-Denis இல் உள்ள Stade de France மைதானத்தில் இடம்பெறுகிறது.
பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கல் மோதும் இறுதிப்போட்டியின் முடிவில், 2016ஆம் ஆண்டின் 'சாம்பியன்' யார் என தெரிந்துவிடும். அது பிரான்சாக இருப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அது ஒரு புறம் இருக்க... கடந்த இரண்டு மாத காலமாக யூரோ கிண்ண போட்டிகள் தொடர்பான 'வரலாற்று பதிவுகளை' பிரெஞ்சு புதினம் வெளியிட்டிருந்தது. இந்த தொடர், இன்றோடு முடிவுக்கு வருகிறது.
அடுத்த யூரோ கிண்ண போட்டிகள் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. 2020 ஆண்டில் யூரோ கிண்ண போட்டிகள் தனது 60வது வயதை கொண்டாடுகிறது. அதனால் போட்டிகளை மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவாம். இதுவரை வெளிவந்த செய்திகளின் படி, 13 நாடுகளில் உள்ள 13 மைதானங்களில் போட்டிகளை நடாத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
URFA தலைவர் Michel Platini தெரிவிக்கும் போது, மிக பிரம்மாண்டமாய் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். யூரோப்பில் உள்ள 13 நாடுகளை தேர்ந்தெடுத்து, 13 நாடுகளிலும் போட்டிகளை நடாத்த இருக்கிறோம். அப்போட்டியில் வெற்றி பெறும் அணி 2021ஆம் ஆண்டு FIFA உலககிண்ண போட்டிக்கு தெரிவாகும்' என தெரிவித்துள்ளார்.
போட்டிகள் நடைபெறும் 13 நாடுகளை சேர்ந்த அணிகளும் தானாகவே "யூரோ கிண்ணம் 2020" போட்டிகளுக்கு தெரிவாகிவிடும். இதில் பிரான்சுக்கு மாத்திரமே பெரும் சவால் காத்திருக்கிறது.
அதாவது, மேலே தெரிவித்த 13 நாடுகளில் பிரான்ஸ் இல்லை!! அதனால் 2020ஆம் ஆண்டு போட்டிக்குள் நுழைய, நாளை இடம்பெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால், தெரிவுப்போட்டிகளில் விளையாடி, தெரிவாக வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படும்! எது எப்படியோ... இந்த வருடம் பிரான்ஸ் 'சாம்பியன்' ஆகி, 2020 போட்டிக்கும் தெரிவாக வேண்டும் என்பதே பலரது கனவாக இருக்கிறது!! நாமும் மனதார வாழ்த்துவோம்!!