ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

7 வைகாசி 2025 புதன் 11:31 | பார்வைகள் : 309
ஏமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுகத்தின் மீது திங்கட்கிழமை (05) வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பிரதான விமான நிலையத்திற்கு அருகே ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் ஏவுகணையை ஏவிய ஒரு நாளுக்குப் பின்னர் இந்த தாக்குதல் வந்துள்ளது.
ஹொடைடா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஹவுதி பயங்கரவாத இலக்குகள் என்று அழைக்கப்பட்ட இடங்களைத் தாக்கியதாக இராணுவம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 35 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் சபா செய்தி நிறுவனம் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.