பிரான்ஸ் புதிய ஜெர்மன் தலைவருடன் இணைந்து கூட்டு முயற்சி!!

7 வைகாசி 2025 புதன் 14:49 | பார்வைகள் : 719
பிரான்ஸ் மற்றும் புதிய ஜெர்மன் தலைவர் ஃப்ரிட்ரிக் மெர்சுடன் (Friedrich Merz) இணைந்து ஒரு கூட்டு பாதுகாப்பு திட்டத்தை அமைக்க உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று அறிவித்துள்ளார்.
இந்த திட்டமானது, இரு நாடுகளும் சந்திக்கும் மூலதன சவால்களுக்கு கூட்டு தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்துடன் இயங்கும். முதல் கூட்டம் கோடைகாலத்தில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
இம்மானுவேல் மக்ரோன் மேலும், எதிர்கால போர்களை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்கும் கூட்டுத் திட்டம் ஒன்றை மேற்கொள்வதாக கூறியுள்ளார். பிரான்ஸ்-ஜெர்மன் ஒத்துழைப்பை மீண்டும் வலுப்படுத்தி, ஐரோப்பா எதிர்கொள்ளும் சவால்களுக்கு இணைந்து பதிலளிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.