எழுபது வயதை தொட்ட பிகினி!
7 ஆடி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 19996
இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் நீச்சல் உடையான பிகினி (Bikini) பிறந்து, கடந்த 5ம் திகதியுடன் தனது 70 வது வயதை தொட்டிருக்கிறது.
பரிசின் 9ம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'Casino de Paris'ல் 'காபரே' நடனம் ஆடும் பெண்ணான Micheline Bernardini என்பவர் தான் முதன் முதலாக பிகினி எனும் உடையை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.
சிறிய பெட்டி அல்லது கைப்பை ஒன்றுக்குள் மடித்து வைத்து எடுத்துச்செல்லக்கூடிய மிக சிறிய நீச்சல் உடை அது. ஆரம்பத்தில் அது பிகினி என அழைக்கப்படவில்லை.
பிரான்சை சேர்ந்த இஞ்சினியரும், ஆடை வடிவமைப்பாளருமான Louis Réard என்பவரே இந்த பிகினியை வடிவமைத்தவர் ஆகும். நீச்சல் உடைக்கான 'ஃபேஷன் ஷோ' ஒன்றிலேயே பல 'மொடல்கள்' நீச்சல் உடை அணிந்து 'கேட் வாக்' சென்றார்கள். அதில் கலந்துகொண்ட ஒரு மொடல் தான் மேலே குறிப்பிட்ட Micheline Bernardini. பின்னர் அவரே அந்த 'ஃபேஷன் ஷோ'வில் சிறந்த ஆடைக்கான (??!!) விருதை பெற்றுக்கொண்டார்.
ஆனால் இந்த நீச்சல் உடை வடிவமைப்பில் மேலும் ஒருவருக்கு பங்குண்டு. அவர் பெயர் Jacques Heim. இவர் தான் முதன் முறையாக நீச்சல் உடையை இரண்டு பகுதிகளாக ( two-piece swimsuit ) பிரித்தார். மே மாதம் 1946ல். அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து, தற்போது பாவனையில் உள்ள 'பிகினி'யை ஜூலை மாதம் 5ம் திகதி 1946ல் அறிமுகம் செய்து வைத்தார்கள்.
அதன்பின்னர் சில வருடங்கள் கழித்து திரைப்படங்களில் எல்லாம் நாயகி பிகினியில் வலம் வர... வியாபாரம் சூடு பிடித்தது. இன்றைய திகதியில் பிகினி பல விதங்களில் கிடைக்கிறது. ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தும் used and through வகையறா பிகினிகள் கூட கிடைக்கின்றன.
Susan Rosen என்பவர் ஒரு பிகினியை உருவாக்கினார். அதன் விலை வெறும் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள். முழுவதும் இரத்தினங்களால் ஆனதாம்!
இதுபோல் பிகினி குறித்த பல சுவாரஷ்ய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. நாம் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொண்டு விடைபெறுவோம். Happy Birthday பிகினி!!