இந்தியாவிவுடன் சமரசத்திற்கு தாயார்- பாகிஸ்தான் தெரிவிப்பு

7 வைகாசி 2025 புதன் 17:56 | பார்வைகள் : 523
இந்தியாவுடனான இராணுவ மோதலை நிறுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்தார்.
இந்தியா பின்வாங்கினால், பாகிஸ்தான் நிச்சயமாக இந்த பதற்றத்தை நிறுத்தும் என்று ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் ஆசிப் இதனைக் கூறினார்.
இன்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள “பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு” எதிராக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்படுவதாக இந்தியா அறிவித்தது. இந்தியத் தாக்குதலில் குறைந்தது எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர் என்று இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள இராணுவ இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தியது.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட இரண்டு ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து இந்திய போர் விமானங்களை அழித்ததாக பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகரில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இது அமைந்தது.