Paristamil Navigation Paristamil advert login

■ இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து சீரடைகிறது!!

■ இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து சீரடைகிறது!!

7 வைகாசி 2025 புதன் 20:37 | பார்வைகள் : 1073


நாளை மே 8, வியாழக்கிழமையுடன் இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து சீரடைவதாக SNCF அறிவித்துள்ளது.

மே 5, திங்கட்கிழமை ஆரம்பித்திருந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக RER உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்களின் விடுமுறை பயணம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை வியாழக்கிழமையுடன் போக்குவரத்து சீரடையும் என தொடருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேவேளை, இவ்வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், 10 இல் ஒன்பது சேவைகள் இயங்கும் எனவும் SNCF உறுதியளித்துள்ளது.

மேலும், TGV பயணங்கள் தடைப்பட்டிருந்தால் பயணக்கட்டணத்தின் 50% சதவீத பணம் மேலதிகமாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்