பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு

8 வைகாசி 2025 வியாழன் 05:59 | பார்வைகள் : 339
பாக்.,கின் லாகூரில் இருந்து 40 கி.மீ., தொலை வில் உள்ள முரிட்கேயில், நம் ராணுவத்தினர் நடத் திய தாக்குலில், ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது.
அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகியோரின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தன. அதில், பாக்., ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக அந்த பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மார்கஜி முஸ்லிம் லீக்கின் செய்தி தொடர் பாளர் தபிஸ் கய்யூம் தெரிவித்தார்.
இறுதிச்சடங்குகளுக்கு பின், மூன்று பயங்கரவாதிகளின் உடல்களும், சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாக்., ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதால், பயங்கரவாதிகளுடன் பாக்., ராணுவத்துக்குள்ள தொடர்பு அம்பலமாகியுள்ளது