'டைட்டானிக்' படத்தில் தோன்றிய கார் பிரான்சில் ஏலம்!
5 ஆடி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18261
டைட்டானிக் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய கார் ஒன்று சமீபத்தில் ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த டைட்டானிக் படத்தில், நாயகனுக்கும் நாயகிக்குமான ரொமான்ஸ் காட்சிகளை ஒரு காருக்குள் எடுத்திருப்பார்கள். 1910 - 1912 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டிருந்த CB வகை Renault கார் அது. அந்த காலத்தில் அது 'லக்ஸரி' கார் ஆகும். அந்த கார்.. பிரான்சில் சமீபத்தில் ஏலத்தில் விடப்படு, 90,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
நூறு வருடங்களுக்கு மேற்பட்டாலும், அதன் ஒரிஜினல் பாகங்களோடு இந்த கார் இருந்திருக்கிறது. இதே போன்றதொரு கார், உண்மையான டைட்டானிக் கப்பலில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கடல் கல்லறையில் கண்டெடுக்கப்படவில்லை. இந்த தகவலை தெரிந்துகொண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்... தற்போது ஏலத்தில் விடப்பட்ட காரை கண்டுபிடித்து படமாக்கியுள்ளார்.
டைட்டானிக்கில் சென்றாலும் பொன். டைட்டானிக் படத்தில் வந்தாலும் பொன். புதுமொழி நல்லா இருக்கா?