நாசவேலைகள் - 44 பேர் கைது - காவற்துறையினர் தகவல்!!

8 வைகாசி 2025 வியாழன் 10:47 | பார்வைகள் : 1631
நேற்று 7ம் திகதி பரிஸ் சன்-ஜேர்மன் அணி லீக் இறுதிப் போட்டிக்குத் குதியானதைத் தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது.
இந்த வன்முறைகளில் இது வரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிஸ் சன்-ஜேர்மன் அணியின் மைதானமானParc des Princes அருகிலும், சோம்ஸ் எலிசெயிலும் ஆதரவாளர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது நடந்த வன்முறைகளில் இதுவரை 44 பேர் கைது செய்ய்பபட்டதோடு, பலர் காயமும் அடைந்துள்ளனர்.
«பொதுமக்கள் சொத்திற்கு சேதம் விளைவித்தமை, நாசவேலைகள் மற்றும் வன்முறைகள் செய்யும் குழுவினருடன் சேரந்தியங்கமை» ஆகிய குற்றங்களிற்காகவே, இந்த 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவற்துறையினரின் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.