டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோஹித் சர்மா

8 வைகாசி 2025 வியாழன் 11:22 | பார்வைகள் : 138
இந்தியா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக அணியை வழிநடத்தி வந்தவர் ரோஹித் சர்மா.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்ததொடரில், ரோகித் சர்மாவை அணித்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக புதிய அணித்தலைவரை பிசிசிஐ நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மாவின் இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த T20 உலகக்கோப்பையை வென்ற பின், T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.