Paristamil Navigation Paristamil advert login

'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Édith Piaf!!

'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Édith Piaf!!

4 ஆடி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 18475


நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை எதுவானாலும்... அதில் நீங்கள் உச்சபட்ச வெற்றியை ருசிக்கலாம். அந்த துறையில் சிகரத்தை தொடலாம். கடின உழைப்பும்... விடா முயற்சியுமே ஒரு மனிதனை வெற்றியாளன் ஆக்குகிறது. இதோ... இந்த வாரம் 'சிகரம் தொட்ட மனிதர்கள்' பகுதியை அலங்கரிக்கும் இப்பெண்மணி... அதற்கோர் எடுத்துக்காட்டு!!
 
Édith Piaf : பாடகி, பாடலாசிரியர்.
 
பரிஸ் நகரில் டிசம்பர் மாதம், 19ம் திகதி, 1915இல் Édith Piaf  பிறந்தபோது... முதலாம் உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. பரிசிலேயே தனது ஆரம்ப கல்வியினை தொடர்ந்த Édith Piaf , தனது 15வது வயதில்.. முதல் பாடலை எழுதுகிறார். இயற்கையை பற்றி எழுதிய “La Vie en Rose,” பாடல் பலத்த வரவேற்பை பெறுகிறது. 
 
பரிசில் மத்தியில் அமைந்துள்ள Champs-Élysées பகுதியில், இளைஞர்கள் அதிகளவில் கூடும் Le Gerny எனும் ஒரு இரவு நேர 'க்ளப்' இருந்தது. அந்த க்ளப்பின் நிர்வாகியான Louis Leplée, 1935 ஆம் ஆண்டு Édith Piaf க்கு இருக்கும் திறமை பற்றி தெரிந்துகொள்கிறார். அவருக்கான வெற்றிப்படிகள் அங்கே ஆரம்பிக்கிறது. அந்த நேரத்தில் படு பிரபலமாக இருந்த பாடகர் இசையமைப்பாளர் என பல திறமைகள் கொண்ட Maurice Chevalier என்பவரிடம் Édith Piaf அழைத்துவரப்படுகிறார். அதே வருடத்தில் இரண்டு ஆல்பங்கள் Édith Piaf பாடுகிறாள். 
 
அந்த இரண்டு ஆல்பங்களோடு, எதிர்பாரா விதமாக Maurice Chevalier கொலைசெய்யப்பட,  Édith Piaf  தன் திறமையை நிரூபிக்க Raymond Asso எனும் இசையமைப்பாளரோடு சேந்து பாடுகிறார். பின்னர் அக்குழுவின் பிரதான பாடகியாகவும், Raymondஇன் காதலியாகவும் மாறுகிறார். 
 
அதன் பின்னர் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் Édith Piaf பிரான்ஸ் முழுவதும் அறியப்படும் பாடகி ஆகிறார். புதிய புதிய வடிவங்களில் எல்லாம் பாடல் எழுதுகிறார். அனைவரும் ரசிக்கும்படியாக இந்த வரிகள் அமைகின்றன.
 
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததும், Édith Piaf இன் புகழ் எல்லைகள் தாண்டியது. ஐரோப்பா முழுவதும் புகழ் பரவுகிறது. தேசம் விட்டு தேசம் சென்று பாடல் பாடுகிறார். கைதட்டல்களையும், ரசிகர்களையும், பணத்தாள்களையும் ஒருசேர சம்பாதிக்கிறார். 
 
அமெரிக்காவில் பகழ் பரவுகிறது. Édith Piafஇன் ஓடியோ கேசட்கள் விற்றுத்தள்ளுகின்றன. 'லைம் லைட்'டில் சில பிரச்சனைகள் வந்து சேருகிறது. மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார். வேகமாக கார் ஓடி விபத்துக்குள்ளாகுகிறார். தன் வாழ்நாளில் மூன்று பாரிய விபத்துக்கு முகம் கொடுக்கிறார். மனநிலை மாறுகிறது. தன் துறையில் பல தியாகங்களை சந்தித்து முன்னேறிய Édith Piaf, கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்குகிறார். இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார். இரண்டுமே நிலைக்கவில்லை. தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இருபது வயது இளையவரான அவரின் உதவியாளருடன் குடும்பம் நடத்தினார். 
 
ஏப்ரல் 1963, தனது இறுதிப்பாடலை பாடுகிறார். மதுப்பழக்கத்தால் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த Édith Piafஇன் 'கிராஃப்' அந்த ஒரு பாடலுடன் மேலும் உச்சமடைகிறது. 
ஒக்டோபர் 10, 1963 ஆண்டு, கல்லீரல் பாதிப்படைந்து மரணத்தை தழுவுகிறார். 
 
Édith Piaf வாழ்க்கையை இரண்டு விதங்களாக பிரிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கை, கலை வாழ்க்கை. இரண்டிலுமே பல தடைகளை தாண்டி வெற்றிக்கோடுகளை நோக்கி ஓடியவர்...  இறுதியில் கலை வாழ்க்கையின் வெற்றிக்கோடுகளை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது. Édith Piaf இன்று இல்லை. அது குறித்து எவருக்கும் அக்கறையும் இல்லை. ஆனால் அவரின் பாடல்கள் இப்போதும் ஒலிக்கின்றன. எதிர்காலங்களிலும் ஒலிக்கும்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்